சேட்டுக் காகங்கள்

சனிக்கிழமைகளில் மட்டும்தான் இந்தக் காக்கைகள் வருகின்றன என்று அம்மா சொன்னாள். வாரம்தோறும் அலாரம் வைத்தாற்போலச் சரியாகக் காலை எட்டு மணிக்கு அவை வீட்டு வாசலில் ஆஜராகிவிடுகின்றன. தயாராக, தடிதடியாக நாலு சப்பாத்திகளைச் சுட்டு எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்துவிடுகிறாள் அம்மா. பெரிய பெரிய துண்டுகளாகப் பிய்த்துப் போடப் போட ஒவ்வொரு காக்கையும் வரிசையில் வந்து ஒரு துண்டு எடுத்துக்கொண்டு போகிறது. எண்ணி நாலு சப்பாத்திகள். இருபது துண்டுகள். அந்தக் காக்கைகளின் எண்ணிக்கை கூடுவதுமில்லை; குறைவதுமில்லை. ஆளுக்கொரு துண்டாக எடுத்துக்கொண்டு விடைபெற்றுவிடுகின்றன. … Continue reading சேட்டுக் காகங்கள்